ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Last Modified சனி, 10 பிப்ரவரி 2018 (12:23 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில் ஒருநாள் தொடரை
கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

தென்னாப்பரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை
பெற்றுள்ளது.

இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது, இந்த போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடரை 4-0என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.

இதன்முலம் இந்திய அணி தென்னாப்பரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையை அடையும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :