Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மனைவி, குழந்தைகளை துபாயில் தவிக்கவிட்டு, தென்னாப்பிரிக்க சென்றது ஏன்? ஷிகர் தவான் ஆத்திரம்

Last Modified சனி, 30 டிசம்பர் 2017 (06:58 IST)

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி விரைவில் விளையாடவுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று மும்பையில் இருந்து கிளம்பினார்.

மும்பையில் இருந்து துபாய் சென்று பின்னர் அங்கிருந்து தென்னாபிரிக்க செல்ல திட்டமிடப்பட்டது. மும்பையில் இருந்து துபாய் செல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் துபாயில் ஷிகர் தவான் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என பிளை எமிரேட்ஸ் நிறுவனம் கண்டிப்பாக கூறிவிட்டது.

இதனால் துபாயில் மனைவி குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு ஷிகர் தவான் மட்டும் தென்னாப்பிரிக்கா சென்றார். இதுகுறித்து ஷிகர் தவான் ஆத்திரத்துடன் தனது டுவிட்டரில் கூறியபோது, 'பிளை எமிரேட்ஸ் நிறுவனம், மும்பையில் நாங்கள் கிளம்பியபோது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை கேட்டிருக்கலாம். கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் துபாயில் கேட்டதால் எனது மனைவி, குழந்தைகளை துபாயில் தவிக்கவிட்டு வந்துள்ளேன். அவர்கள் மும்பையில் இருந்து சான்றிதழ் வருவதற்காக துபாயில் காத்திருக்கின்றனர் என்று ஆத்திரத்துடன் பதிவு செய்தார். இந்த சம்பவத்திற்காக பிளை எமிரேட் நிறுவனம் ஷிகர் தவானிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :