Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குடும்பத்தை தனியே விட்டு சென்ற தவான்....

Last Updated: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (22:00 IST)
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி மாதம் துவங்கவுள்ளது. இதனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது.

நேற்று முந்தினம் இந்திய அணி மும்பையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் துபாய் சென்று பின்னர் அங்கிருந்து தென் ஆப்பிரிக்கா புறப்படுவதாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் தங்களது குடும்பத்தை தங்களுடன் அழைத்துச் சென்றனர்.


இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்றார். துபாயில் இருந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட தயாராக இருந்த நிலையில், தவானின் மனைவி மற்றும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் சில ஆவணங்கள் வேண்டும் என்று எமிரேட்ஸ் ஏர்லைன் நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.

இதற்கான ஆவணங்கள் ஏதும் தவானிடம் இல்லாததால், விமான நிறுவனம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தென் ஆப்பிரிக்கா புறப்பட மறுத்து விட்டது. இதனால் துபாயில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு தவான் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு தனியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


இதனால், தாவான் எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார். டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த டிவிட் பின்வருமாறு....இதில் மேலும் படிக்கவும் :