வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (21:49 IST)

தென் ஆப்பிரிக்காவில் சமோசாவிற்கு இவ்வளவு மவுசா!!

தென் ஆப்பிரிக்காவில் இந்திய சமூகத்தினருக்கான செய்தித்தாள் நிறுவனம் ஒன்று சமையல் மற்றும் சாப்பிடும் போட்டி ஒன்றை நடத்தியது. இதில் பல வகை உணவுகள் சமைக்கப்பட்டன. அதில் குறிப்பாக சமோசா மற்றும் சிக்கன் ரெசிபிக்கள் செய்தித்தாள் நிறுவனத்திற்கு அனுப்பட்டன. சாக்லேட் வகைகள் உள்பட பல உணவு வகைகளை பின் தள்ளி விட்டு சமோசா ரெசிபி முதல் பரிசை தட்டிச்சென்றது. 
 
பஞ்சாபின் பாரம்பரிய திண்பண்டமான சமோசா தென் ஆப்பிரிக்காவில் பிரபலமானது. இந்த உணவு வகையின் தயாரிப்பாளர் சல்மா அக்ஜீ பேசுகையில், இந்த சமோசா ரெசிபில் உள்ள சிக்கனில் காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் இரண்டு வகையான பாலாடைக்கட்டியை சேர்ப்பேன். அதனால் தான் சமோசா மிகவும் வித்தியாசமானதாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும், உணவு சாப்பிடும் போட்டியில் 10 சமோக்களை 1 நிமிடத்தில் சாப்பிட்டு 18 வயது வாலிபர் பரிசை தட்டிச்சென்றார்.