இன்றைய டி20 நடக்குமா? மழை குறிக்கிடும் வாய்ப்பு!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (16:57 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் டி20 போட்டி இன்று கவுஹாத்தியில் மாலை 7 மணி அளவில் நடைபெறவுள்ளது. 

 
 
முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடந்தது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 
 
இரு அணிகள் மோதும் போட்டி கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. அங்கு பெய்த மழை காரணமாக இந்திய அணியினர் மேற்கொள்ள இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில், இன்றும் மழை பெய்ய சுமார் 40 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 
 
ராஞ்சியில் மழை வர 7 சதவீதம் வாய்ப்பு இருந்ததாக அற்விக்கப்பட போதே போட்டி சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :