செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (21:12 IST)

விறுவிறுப்பான கடைசி போட்டி; ரோகித் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 5-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாதனை படைத்தது. 
 
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இன்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாட உள்ளனர்.
 
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ரோகித் சர்மா இந்த போட்டியில் தனது அதிரடியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.