1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (14:36 IST)

தென் ஆப்பிரிக்கவை கண்டு பயமில்லை......அதற்கு இதான் சேம்பிள் - ரெய்னா

மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ள்ளார்.

 
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் இடையே மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா வெற்றியுடன் உள்ளனர். 
 
இன்று நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு அணிகள் தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளனர். இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து இந்திய அணியில் இடம்பிடித்த சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-
 
தென் ஆப்பிரிக்காவின் ஆக்ரோஷம் குறித்து நாங்கள் பெரிதாக கவலைப்படவில்லை. எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருக்குறது. இதனால் தென் ஆப்பிரிக்காவின் சேகிங்கை எங்களால் கட்டுப்படுத்த இயலும். தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த நாங்கள் புதிய திட்டம் வைத்துள்ளோம்.
 
முதலில் சேசிங் செய்தாலும், பேட்டிங் செய்தாலும் முதல் 6 ஓவரில்  சிறப்பாக விளையாடுவது முக்கியமானது. இதை கொண்டுதான் ஆட்டம் முடிவு செய்யப்படும்.