டி20 தொடரை வெல்லுமா இந்தியா?: தென்னாப்பிரிக்காவுடன் இன்று பலப்பரிட்சை

india
Last Updated: சனி, 24 பிப்ரவரி 2018 (11:31 IST)
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கேப்டவுனில் இந்திய நேரப்படி இன்று  இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
 
இந்நிலையில், கோப்பை யாருக்கு என்று முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று  நடைபெறுகிறது. இந்த போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :