திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (15:39 IST)

விராட் கோஹ்லிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ரன் குவிப்பதில் வல்லவர். இவர் தொடர்ந்து எல்லா போட்டிகளில் ரன் குவித்து வருவதால் இவருக்கு ரன் மிஷின் என்ற பெயரும் உள்ளது.
 
முன்பு சச்சின் இருந்த காலக்கட்டத்தில் எப்படி அவர் எல்லா போட்டிகளிலும் ரன் குவித்து வந்தாரோ அதே போன்று கோஹ்லி எல்லா போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 
 
ஆனால் இவரது கேப்டனிசில் குறைபாடு உள்ளாதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்திய இழந்தபோது கடுமையாக விமர்சித்தார். 
 
இருந்தாலும் சிறந்த பேட்ஸ்மேன். இந்திய அணியின் நட்சத்திர வீர்ர. இந்நிலையில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய விளையாட்டுத்துறை பரிந்துரை செய்துள்ளது.