Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவின் பீல்டிங்கை கழுவி ஊற்றிய முன்னாள் கேப்டன்

Gavaskar
Last Updated: வியாழன், 7 டிசம்பர் 2017 (16:42 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் போட்டியில் இந்திய வீரர்களின் மோசமான பீல்டிங் குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 பேட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் மற்றும் மூன்றாவது பொட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது.
 
கடைசி டெஸ்ட் போட்டியில் கடையில் நாளில் இந்திய அணி பீல்டிங் மோசமான நிலையில் இருந்தது. இதன் காரணமாகவே இந்திய வெற்றிய பெற போட்டி டிராவில் முடிந்தது. கேப்டன் கோலி உள்பட ஸ்லிப்பில் நின்ற வீரர்கள் பலமுறை கேட்ச் வாய்ப்பை தவறவிட்டனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் மோசமான பீல்டிங் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
இந்திய அணியின் பீல்டிங் இன்னும் கவலைகிடமாகவே காணப்படுகிறது. புஜாரா பந்தை துரத்தும்போது ஹெண்ட் பிரேக்குடன் ஓடும் கார் போல காணப்படுகிறார். அதேபோல் அஷ்வினுக்கு படத்தை தடுக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. ஆனால் அது செயலில் வெளிபடவில்லை என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :