வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (14:29 IST)

சி எஸ் கே அணியில் இருந்து வெளியேற நினைக்கும் தோனி ? – ரசிகர்கள் அதிர்ச்சி !

சி எஸ் கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனி அடுத்த ஆண்டுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக சி.எஸ்.கே அணியை அதன் கேப்டன் தோனி வழிநடத்தி வருகிறார். இதுவரை அந்த அணி தோனி தலைமையின் கீழ்  3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு அவர் சென்னை அணியில் இருந்து விலகி வேறு அணியில் விளையாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சி எஸ் கே ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இதுபற்றி கேள்வி எழுப்ப அதை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.