வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (12:44 IST)

தோனியை முந்திய கோஹ்லி – டெஸ்ட்டில் புது சாதனை !

இந்திய அணியின் கேப்டன் தோனி செய்த சாதனை ஒன்றை கோஹ்லி தகர்த்துள்ளார்.

இந்திய அணி பங்களாதேஷுக்கு எதிரான போட்டியை மூன்றும் நாளும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து மூன்றாவது நாளே இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இது கோஹ்லி தலைமையிலான 10 ஆவது இன்னிங்ஸ் வெற்றியாகும். இது இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்ச இன்னிங்ஸ் வெற்றியாகும்.

இதற்கு முன்னர் தோனி தலைமையிலான இந்திய அணி 9 முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த சாதனையை கோலி தகர்த்துள்ளார். மொகமது அசாருதீன் தலைமையில் 8 வெற்றியும், கங்குலி தலைமையில் 7 வெற்றியும், ராகுல் திராவிட், கபில்தேவ், பாலி உம்ரிகர்  தலா 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது.