முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: விராத் கோஹ்லி சதம்

Last Updated: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (00:07 IST)
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆறுதல் வெற்றி அடைந்தது

இந்த நிலையில் இன்று டர்பன் நகரில் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் டீபிளஸ்சிஸ் அபார சதத்தால் அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 269 ரன்கள் எடுத்தது.

270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் ரோஹித் சர்மா, தவான் விக்கெட்டுக்களை இழந்தாலும் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால்
இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி அபாரமாக விளையாடி 112 ரன்களும், ரஹானே 79 ரன்களும் எடுத்தனர். வழக்கம்போல் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் தல தோனி.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதில் மேலும் படிக்கவும் :