Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யாருக்காக இந்த பட்ஜெட் 2018? புறக்கணிக்கப்பட்ட தென் இந்தியா மாநிலங்கள்; பின்னணி என்ன??

Last Updated: வியாழன், 1 பிப்ரவரி 2018 (14:12 IST)
மத்திய அரசின் சார்பாக 2018 ஆம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். எனவே தேர்தலை கவனத்தில் வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வருட பட்ஜெட் தாக்கலில் தென் இந்தியா புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலை கவனத்தில் கொண்டே இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, விரைவி தேர்தல் நெருங்கும் மாநிலங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.


கர்நாடகாவில் அடுத்து தேர்தல் வருவதால், பெங்களூர் சார்ந்து சில நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களுக்கு பெரிய அளவில் திட்டங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்ப்டத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :