டு பிளிசிஸ் சதம்; இந்திய அணிக்கு ரன்கள் 270 இலக்கு

Du Plessis
Last Updated: வியாழன், 1 பிப்ரவரி 2018 (20:19 IST)
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பரிக்க அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தென் ஆப்பரிக்க அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
 
இன்று முதல் ஒருநாள் போட்டி டர்பனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பரிக்க அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.
 
தென் ஆப்பரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ் சதம் விளாசினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாசல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து இந்திய அணி 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :