திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (09:12 IST)

இந்தியா-மே.இ.தீவுகள் ஒருநாள் போட்டி தொடர்.. இன்று முதல் போட்டி தொடக்கம்..!

India West Indies
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டி தொடர் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதில் 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்க உள்ளது. இன்றைய முதல் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூலை 29ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும்,  ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும்  நடைபெற உள்ளது 
 
அதன் பின் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பதும் ஆகஸ்ட்  3, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 8, ஆகஸ்ட் 12  மற்றும் ஆகஸ்ட் 13 என ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva