திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 நவம்பர் 2022 (12:52 IST)

மழை விளையாடியதால் இந்தியா-நியூசிலாந்து போட்டி ரத்து!

ind vs newz
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று ஹாமில்டன் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனை அடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 30-ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
Edited by Siva