Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர்: தங்கம் வென்றார் மேரி கோம்


sivalingam| Last Updated: புதன், 8 நவம்பர் 2017 (13:17 IST)
வியட்நாம் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவில் காலிறுதியில் சீனாவின் தைபேவின் சாய் பிங்கையும், அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை சுபாஸா கொமுராவையும் வென்றார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தென்கொரியாவின் கிம் ஹையங் மி என்பவருடன் மோதினார்.


 
 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மேரிகோம், கிம் ஹையங் மியை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆசிய குத்துச்சண்டை தொடரில் மேரி கோம் வெல்லும் 5வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மேரிகோமுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் குவிந்து வருகிறது. தங்க மெடலுடன் தேசிய கொடியை பிடித்து இருக்கும் மேரிகோமின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :