திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (13:18 IST)

டாஸ் வென்ற இந்திய அணி எடுத்த அதிரடி முடிவு!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடும் பதினொரு வீரர்களின் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இன்று விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்ற பதினோரு வீர்ர்கள் குறித்த விவரங்கள் இதோ: மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், புஜாரே, ரஹானே, விகாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது