Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

120 புள்ளிகள் எடுத்து முதலிடத்திற்கு வருமா இந்திய அணி?


Sugapriya Prakash| Last Updated: புதன், 13 செப்டம்பர் 2017 (21:49 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

 
 
இந்த தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. 
 
ஆனால், ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2 வது இடத்திலும், இந்தியா 3 வது இடத்திலும் உள்ளன.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றினால் முதல் இடத்தை பிடித்துவிடும். அப்பொழுது இந்திய அணியின் புள்ளிகள் 120 ஆக இருக்கும்.
 
5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால் 122 புள்ளிகளை பெறும். இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றால் 118 புள்ளிகள் பெற்று 2 வது இடத்துக்கு முன்னேற முடியும்.
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஆட்டம் வருகிற 17 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :