Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிட்னஸ் டெஸ்டில் தோல்வி: யுவராஜ் சிங்கிற்கு கருணை காட்டுவதே ரிஸ்க்!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 11 செப்டம்பர் 2017 (21:20 IST)
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பினார். 

 
 
இதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியா டி20 தொடரின் போது அணியில் இடம்பிடித்தார். அடுத்து இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் கலந்துகொண்டார். 
 
பின்னர் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேர்வுக்குழு, யுவராஜ் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
 
பின்னர் பிட்னஸ் டெஸ்டில் வெற்றி பெறவில்லை என்பதால் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. யுவராஜ் அணிக்கு திரும்புவது கடினமான ஒன்று என பேச்சு அடிபடுகிறது.
 
இந்நிலையில், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் யுவராஜ் சிங்கிற்கு தற்போதைய தேர்வுக்குழு கருணை காட்டினால் அது தேர்வாளர்களின் சொந்த ரிஸ்க் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் தனது திறமையை நிரூபிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :