Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆமாம் நான் அப்படிதான்; ரெய்னா கூறியதை ஒப்புக்கொண்ட தோனி; பரபரப்பான டுவிட்டர்

Raina
Last Updated: புதன், 29 நவம்பர் 2017 (18:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சில நாட்களுக்கு முன்னாள் கேப்டன் தோனி ‘கூல் கேப்டன்’ என்ற பெயர் பெற்றதற்கு தனது கருத்தை கூறியிருந்தார். தற்போது தோனி அதற்கு பதிலளித்துள்ளார்.


 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அனைவராலும் ‘கூல் கேப்டன் ‘ என்று அழைப்படுகிறார். சில நாட்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா இதுகுறித்து தனது கருத்தை கூறியிருந்தார். தோனி கேமராவுக்கு முன் எதையும் காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால் அவர் எங்களை நன்றாகவே திட்டுவார். அவருக்கு கோபம் வரும். அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது என்றார்.
 
ரெய்னாவின் இந்த கருத்து தற்போது தோனி பதிலளிக்கும் விதமாக கூறியதாவது:-
 
என்னால் எப்போதும் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும். விளையாடுவது கிரிக்கெட்டாக இருந்தாலும் இது மிகவும் சீரியஸான விஷயம். அப்படி இருக்கும் போது யாராவது தவறு செய்தால் கோபம் வரத்தான் செய்யும். நான் எப்போதும் வீரர்களிடம் கோபப்பட மாட்டேன். டிரஸ்ஸிங் ரூமில் என்னைப்போல ஒரு கமெடியான நபரை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே ரெய்னா தோனி கூறிய கருத்துக்கு டுவிட்டரில் பல விவாதங்கள் நடந்தது. இந்நிலையில் தோனி தற்போது கூறிய பதில் கருத்துக்கு தோனி ரசிகர்கள், தோனி அவரது ஸ்டைலில் அருமையாக பதிலடி கொடுத்துள்ளார் என டுவீட் செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :