Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இளம் வீரர்களின் வாய்ப்பை பறிக்கும் தோனி: மலையாய் எழும் விமர்சனங்கள்....

Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (17:58 IST)

Widgets Magazine

இந்திய அணி வீரர்களின் தேர்வில் தோனிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் இளம் வீரர்களின் வாய்ப்பு பறிபோவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


 
 
இந்திய அணிக்கு மூன்று விதமான உலகக்கோப்பைகளை வென்று தந்தவர் தோனி. இவர் இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் என்றும் அழைக்கப்படுகிறார். 
 
சில காரணங்களுக்காக தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது கேப்டன் பொறுப்பையும் துறந்தார். 
 
இருப்பினும் அவரது வயது மற்றும் பார்ம் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. தோனி எப்பொழுது தனது ஓய்வை அறிவிப்பார் என காத்துக்கொண்டிருக்கும் சிலரும் உள்ளனர். 
 
இந்நிலையில் வரும் 2019 உலக கோப்பை வரை தோனி விளையாட திட்டமிட்டிருப்பதால் அவர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பை பறிக்கிறார் என விமர்சனம் எழுந்துள்ளது. 
 
டி20 போட்டிகளில் தோனியை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட நல்ல பார்மில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
 
எனவே, தோனி டி-20 போட்டிகளில் இருந்து விலகி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உலக கோப்பை திருவிழாவில் முதல்முறையாக பங்கேற்கும் இந்தியா

17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலக கோப்பை பேட்டியில் இந்தியா முதல்முறையாக விளையாட ...

news

தமிழ் தலைவாஸ் அணிக்கு 4வது தோல்வி: இனிமேல் தேறாதே!

சென்னையில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை தமிழ் தலைவாஸ் அணி பெற்றுள்ளதால் புரோ கபடி ...

news

இந்திய அணியை கண்டால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயம்: சொல்வது யார் தெரியுமா??

இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது ஆஸ்திரேலியா வீரர்கள் பயப்படுவதாக ஆஸ்திரேலிய அணியின் ...

news

டி20 ஓவர் போட்டியை தொடர்ந்து டி10 அறிமுகம்

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது டி10 ...

Widgets Magazine Widgets Magazine