சசிகலா திங்களன்று பரோலில் வர வாய்ப்பு: கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்!

சசிகலா திங்களன்று பரோலில் வர வாய்ப்பு: கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்!


Caston| Last Modified வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (12:17 IST)
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து தனது கணவரை சந்திக்க பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கின்றன.

 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதோடு அவருக்கு சமீபத்தில் நுரையீரல் அடைப்பும் ஏற்பட்டது. எனவே, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
எனவே, கணவரை மருத்துவமனையில் வந்து சந்திப்பதற்காக, சிறையில் உள்ள சசிகலா, பரோலில் வெளிவர அனுமதி கேட்டு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ள சசிகலா வரும் திங்கள் கிழமை வெளியே வர உள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வருகின்றன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :