புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By cauveri manickam
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (18:07 IST)

கருத்து காமெடியின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்த புஷ்பா புருஷன்

வாய்ப்புகளைத் தட்டிப் பறித்த புஷ்பா புருஷன்

புஷ்பா புருஷனால் தன்னுடைய வாய்ப்புகள் பறிபோவதாகப் புலம்பி வருகிறார் கருத்து காமெடி நடிகர்.


 

 
வெளிச்ச நடிகர் நடித்த லயன் படத்தின் முதல் பாகத்தில், கருத்து காமெடியன் தான் பிரதான காமெடியனாக நடித்தார். ஆனால், இரண்டாம் பாகத்தில் கருத்து காமெடிக்கு பாதி, சந்தன காமெடிக்கு பாதி எனப் பிரித்துக் கொடுத்துவிட்டார் இயக்குநர். அதாவது பரவாயில்லை. மூன்றாம் பாகத்தில் மொத்தமாக கருத்து காமெடியையே தூக்கிவிட்டு, பரோட்டாவால் புகழ்பெற்ற புஷ்பா புருஷனை காமெடியனாக்கிவிட்டனர்.

அதே இயக்குநர், தற்போது இன்னொரு போலீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் காமெடியனாக நடித்தவர் கருத்து காமெடி. ஆனால், இரண்டாம் பாகத்தில் அவருக்குப் பதிலாக புஷ்பா புருஷனையே கமிட் பண்ணியுள்ளார் இயக்குநர். இதனால் தன்னுடைய வாய்ப்புகளை புஷ்பா புருஷன் தட்டிப் பறிப்பதாகப் புலம்பி வருகிறார் கருத்து காமெடி நடிகர்.