Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய அணிக்கு தென் ஆப்ரிக்காவில் காத்திருக்கும் சவால்!!

Last Modified புதன், 27 டிசம்பர் 2017 (19:38 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை கைப்பற்றியது. அடுத்து தென் ஆப்பிரிக்காவில் விளையாடுகிறது. இந்திய அணி இன்று நள்ளிரவு தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி கடும் சவாலாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சதகமானது. எனவே, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

கேப்டன் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் தென் ஆப்பிரிக்கா செல்கிறார். இருவரும் அங்கு புத்தாண்டை கொண்டாடியதும் அனுஷ்கா நாடு திரும்பி விடுவார் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :