Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்குமா பெங்களூரு? ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ipl
Last Modified வியாழன், 17 மே 2018 (11:11 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

 
 
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி, இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது.
 
கட்நத இரு போட்டிகளிளும் பெங்களூரு அணி பெற்ற தொடர் வெற்றியால், அந்த அணியின் ரன்ரேட் விகிதம் உயர்ந்துள்ளது, இந்த போட்டியிளும், அடுத்த போட்டியிளும் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹைதராபாத் அணியோ ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, எனவே இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
ipl
 
இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் படிக்கவும் :