ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் 218 ரன்கள் விளாசிய பெங்களூர்

Last Modified வியாழன், 17 மே 2018 (21:53 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 218 ரன்கள் குவித்தது.

டிவில்லியர்ஸ் 69 ரன்களும், எம்.எம்.அலி 65 ரன்களும், கிராண்தோம் 40 ரன்களும் அதிரடியாக எடுத்தனர்

ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களான ரஷித் கான் 3 விக்கெட்டுக்களையும், கெளல் இரண்டு விக்கெட்டுக்களையும், சந்தீப் ஷர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்

இந்த நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் 219 என்ற இமாலய இலக்கை நோக்கி ஐதராபாத் அணி பேட்டிங் செய்யவுள்ளது. இந்த போட்டியின் வெற்றி தோல்வியால் ஐதராபாத் அணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் பெங்களூரு இந்த போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :