திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (16:06 IST)

ஆசிய ஜூனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி..!

ஆசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
எட்டாவது பெண்கள் ஜூனியர் ஆசிய ஹாக்கி போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சீனா தென்கொரியா இந்தியா ஜப்பான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன
 
இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதிய நிலையில் ஜப்பான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. 
 
இதனை அடுத்து ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்தியா இந்த தொடரின் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran