செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (15:51 IST)

5வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா.. டிக்ளேர் செய்ய வாய்ப்பு இருக்கின்றதா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 
 
நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்த நிலையில் சற்றுமுன் ஐந்தாவது விக்கெட் விழுந்தது. தற்போது ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் அந்த அணி இந்தியாவை விட 320 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அனேகமாக 400 ரன்கள் முன்னிலை பெற்றவுடன் அந்த அணி டிக்ளர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளையுடன் ஆட்டம் முடிவடைய இருப்பதால் வெற்றி தோல்வியுடன் இந்த போட்டி முடிவடைய வேண்டும் என ஆஸ்திரேலியா கண்டிப்பாக கருதும் என்பதும் அதனால் ரிஸ்க் எடுத்து டிக்ளர் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி டிக்ளர் செய்தால் இந்திய அணி டிரா செய்ய தான் விரும்பும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran