வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (13:51 IST)

அஸ்வினை அவரின் பேட்டிங்குக்காகவே நான் அணியில் எடுப்பேன்.. ஸ்டீவ் வாஹ் கருத்து!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும், சொதப்பியது. இந்நிலையில் அஸ்வினை எடுக்காதது ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அஸ்வினை அணியில் எடுக்காததற்குக் காரணமாக லண்டன் ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்ற காரணம் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் “அஸ்வின் பவுலிங் திறமைகளுக்காக இல்லை என்றாலும் அவரின் பேட்டிங் திறனுக்காகவே அணியில் எடுப்பேன்” என அஸ்வினுக்கு ஆதரவாக கூறியுள்ளார்.