1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (16:50 IST)

ஓரம் கட்டியவர்களுக்கு பாடம் புகட்டிய அஸ்வின்: அதிவேக 300 விக்கெட்டுகள்!!

இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 
 
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்லது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. 
 
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. 
 
முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 
 
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்தது. நான்காவது நாளான இன்று இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது.  
 
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார். 
 
இதன் மூலம் டெஸ்ட் தொடரில் மிக விரைவாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.
 
இந்நிலையில் அஸ்வின் 54 போட்டியிலேயே 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நீண்ட காலமாக போட்டிகளில் சேர்க்கப்படமால் இருந்த அஷ்வின் தனது இந்த சாதனையின் மூலம் தன்னை ஓரம்கட்டியவர்களுக்கு சிறந்த பாடம் புகட்டியுள்ளார்.