திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (16:15 IST)

அக்டோபரில் சென்னையில் உலகக்கோப்பை போட்டியா? ரசிகர்கள் அதிருப்தி..!

அக்டோபர் மாதம் சென்னையில் மழை பெய்யும் மாதம் என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் 
 
அக்டோபர் 8, 14, 18, 23 மற்றும் 27 ஆகிய ஐந்து நாட்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அக்டோபர் மாதம் சென்னையில் போட்டியை நடத்துவது ரிஸ்க் என்று கூறப்படுகிறது. சென்னையில் அக்டோபர் மாதம் முழுவதும் மழை பெய்யும் மாதம் என்பதால் இந்த போட்டிகள் சரிவர நடக்குமா என்று கவலை இருப்பதாக ரசிகர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மழை பெய்தால் உடனடியாக அதனை சரி செய்ய மைதான பராமரிப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva