புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அதிகாலை எழுந்துகொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா...?

நாம் உயிர்வாழத் முக்கிய தேவை காற்று. சாதாரண நேரத்தில் உள்ள காற்றில், இரண்டு அணுக்கள் என்ற அளவில் இருக்குமாம், இதுவே,  பிரம்ம முகூர்த்தம் எனும் அதிகாலை வேளையில் ஓசோன் வாயுவும் இந்தக் காற்றில் கலக்கும்போது, ஓசோன் வாயுவில் உள்ள பிராண வாயுவின் அளவான மூன்றும் சேர்ந்து, ஐந்து என்ற பிராணவாயுவின் உயரிய அளவில், பஞ்சபூதங்களும் இணைந்த சக்திநிலையில் இருக்கும். இந்தக் காற்றினை சுவாசிக்கும்போது, மனித உடலில் உள்ள நெடுநாள் வியாதிகளும் தீரும்.
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் பல நன்மைகள் உண்டாகும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன.  வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. எனவேதான் சூரிய நமஸ்காரம் செய்வது  மிகச்சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். 
 
நம் உடலில் ஒளிக் கதிர்கள் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. மேலும் தேவர்களும், பித்ருக்களும்  ஒன்றுகூடும் நேரம் இது. எனவே காலையில் அவர்களை நினைத்தால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
 
உடல் பிராணன் நிரம்பி, வலுவாகும், மேலும் அமிர்த காற்று எனப்படும் ஓசோன் கலந்த காற்றை சுவாசிப்பதனால், உடலும் மனமும் நலமாகி,  தேவர்கள் எனும் உயர்ந்த நிலையை அடைவர் என்று பண்டை நூல்கள் கூறுகின்றன. 
அதிகாலையில், பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் காரியங்கள், வெற்றியைத்தரும் என்பது, பழந்தமிழர் நம்பிக்கை.
 
உடலுக்கும் மனதுக்கும் சக்தி அளிக்கும். அதிகாலையில் நடப்பதும், ஓடுவதும், உடலின் ஆற்றலை சீராக்கி, புத்துணர்வூட்டும் செயல்களாகும். படிப்பது எளிதில் புரியும். நாள் முழுதும் புத்துணர்வாக இருக்கலாம்.
 
அதிகாலை எழுந்து படிப்பதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மாணவர்கள் மட்டுமல்ல வேலைக்கு செல்பவர்கள் கூட உங்கள் வேலையை அதிகாலை தொடங்கினால், உங்கள் வேலையில் நல்ல பலனைபெற முடியும்.
 
நேர்மறை எண்ணங்களுடன், செயல்களில் நேர்மை கொண்டு செயல்படும்போது, அந்த செயல், மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். குறைந்த அளவு பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொண்டாலே, அவை உடலுக்கு அதிக அளவில் செயல்படும் ஆற்றலை வழங்குவதை, நாம் உணர  முடியும்.