புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கடன் பிரச்சனை தீர்ந்து பண புழக்கம் உடனடியாக உயர பரிகாரங்கள்!!

காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்றை பார்த்து வர செல்வ-வளம்  பெருகும்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  ஒவ்வொரு மாதமும் இதை செய்யலாம்.
 
நல்ல பணம் இருந்தும், வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்டுகள் வழங்க  வீண் விரயம் கட்டுப்படும்.
 
காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மற்றும்  எறும்புகளுக்கு உணவாகும். இவைகள் உண்ண உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவது உங்கள் கண் கூடாக தெரியும்.
 
வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும். கடுகு எண்ணெய் கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும்.
பணத்தை சேமிக்க முடியவில்லையே என கவலைபடுவோர், தங்களின் துணிகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கருநீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும்.
 
வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாக்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்துவர வீட்டில் மகா லட்சுமி வரவு  இருக்கும்.