2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

Sasikala| Last Modified வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:20 IST)
சிம்மம் - (மகம், பூரம்,
உத்திரம் 1ம் பாதம்) அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய சிம்மராசியினரே நீங்கள் எதற்கும் கலங்காதவர். இந்த குருப் பெயர்ச்சியில் களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.
மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.


தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை அனுசரித்து செல்வது நல்லது.
பழைய
பாக்கிகளை
வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்
உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க
மனம்விட்டு பேசுவது நல்லது.
பிள்ளைகள்
நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
எதிலும் திருப்தி இல்லாதது
போல் தோன்றும்.

பெண்களுக்கு:
எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு:
கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில்
சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.


- பெருங்குளம் ராமகிருஷ்ணன்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :