Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு

Sasikala| Last Modified வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (16:03 IST)
தனுசு - (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய தனுசு ராசியினரே
நீங்கள் எளிதாக பழகக் கூடியவர். இந்த குருப் பெயர்ச்சியில் பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும்.


சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும்
எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ராசிக்கு 9ல் சூரியன், சனி, புதன் சஞ்சாரம் இருப்பதால் புதியநபர்களின் அறிமுகம்
கிடைக்கும்.
அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம்
அனுசரித்து
நிதானமாக நடந்து கொள்வது
வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும்
காரியங்கள் நல்ல பலன் தரும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்க ளுடன்
அனுசரித்து செல்வதும், வாக்கு
வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு:
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு:
சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ணன்


இதில் மேலும் படிக்கவும் :