Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

Sasikala| Last Modified வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:53 IST)
விருச்சிகம் - (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப் பட்டாலும் முன்கோபம் அதிகமாக இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த குருப் பெயர்ச்சியில் எடுத்த காரியத்தை
செய்துமுடிப்பதில் இழுபறி யான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.
வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க
முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும்.


தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு
பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு: உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு: செயல் திறமை அதிகரிக்கும்.
கல்வியில் வெற்றி பெறுவதை
குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல்
நீங்கும்.


- பெருங்குளம் ராமகிருஷ்ணன்


இதில் மேலும் படிக்கவும் :