செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (09:05 IST)

என் வேகமே என்னைக் கொல்லும்… நீங்கள் யாரும் அழவேண்டாம் – விபத்தில் இறந்த மாணவனின் பைக் வாசகம் !

கடலூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதிவேகமாக சென்று பனைமரத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் தனது நண்பரோடு கடலூருக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக அவர் சென்றுள்ளார். இதனால் சின்னாடிக்குழி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தின் மீது மோதியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ் உயிரிழக்க, அவரது நண்பர் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷின் பைக்கை கைப்பற்றிய போலிஸார் அதில் ‘எனது வேகம் ஒரு நாள் என்னைக் கொல்லும். அதனால் அழுகாதீர்கள் சிரியுங்கள்’ என வாசகம் எழுதியுள்ளதைக் கண்டனர். அவரின் சொல்லே இப்போது நிஜமாகியிருப்பதை நினைத்து புலம்பிச்சென்றனர்.