செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (22:03 IST)

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் டைட்டில் என்ன?

கோலிவுட் திரையுலகில் தற்போது ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் யார் என்ற கேள்விக்கு உடனடியாக விஜய்சேதுபதி என்ற பதில் கிடைக்கும்
 
அந்த வகையில் விஜய்சேதுபதி தற்போது விஜய், அல்லு அர்ஜுன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதோடு கதாநாயகனாகவும் சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார்
 
இதனை அடுத்து விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றை வெங்கடகிருஷ்ன ரோஹ்நாத் என்பவர் இயக்கி வரும். இந்தப் படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதியுடன் மேகா ஆகாஷ் ஜோடி சேர்கிறார்
 
நிவாஸ் கே பிரச்சன்னா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய்சேதுபதியின் 33 வது படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது