விஜய் சேதுபதியுடன் முதல் முதலாக இணையும் மோகன் ராஜா!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் பல படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் என்பவர் இயக்கி வருகிறார்
முதன்முதலாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இளம் நடிகை மேகாஆகாஷ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி அவர்களும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் விஜய் சேதுபதி படத்தில் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இணைந்துள்ளார். ஜெயம் முதல் வேலைக்காரன் வரை பல வெற்றி படங்களை இயக்கிய இவர் ஏற்கனவே ’என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே
நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்சேதுபதி படத்தில் நடிக்கும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டரில் நடிக்க இயக்குனர் அழைத்தபோது அந்த கேரக்டரை கேள்விப்பட்டு உடனே மோகன்ராஜா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
முதன்முதலாக விஜய் சேதுபதியுடன் நடிக்கும் மோகன்ராஜா விரைவில் அவரை வைத்து ஒரு படத்தையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது