1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 அக்டோபர் 2018 (08:38 IST)

ரஜினியை திமுக திடீரென அட்டாக் செய்வது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கட்சியின் பணி 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் கட்சி அறிவிப்பு வெளிவரும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக பத்திரிகை ஒன்றில் ரஜினி குறித்து நீண்ட விமர்சனம் செய்து ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இதுவரை ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே நம்பியிருந்த திமுக தற்போது அவர் கட்சி ஆரம்பிப்பது உறுதி செய்யப்பட்டவுடன் ரஜினியை தாக்க தொடங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் திமுகவில் உள்ள ஒருசில தலைவர்கள் ரஜினி பக்கம் செல்வது மட்டுமின்றி, திமுக கட்டிக்காத்து வந்த வாக்கு வங்கிக்கும் ஆபத்து இருப்பதால்தான் ரஜினியை திமுக அட்டாக் செய்ய தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதிமுக தற்போது பலவீனமாக இருப்பதாகவும், திமுகவின் ஒரே போட்டியாளர் ரஜினி கட்சி என்று மக்கள் முன் நிறுத்துவதற்காகவும் அதிமுகவுக்கு பதிலாக ரஜினியை திமுக விமர்சனம் செய்திருப்பதாகவும் எடுத்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ரஜினி, கமல், மற்றும் தினகரன் கட்சிகள் அதிமுக, திமுக வாக்கு வங்கிகளை பெருமளவில் பிரிக்க இருப்பதால் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் வரும் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றே கூறப்படுகிறது.