1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 27 அக்டோபர் 2018 (11:15 IST)

உங்களையெல்லாம் ரசிகர்களாக அடைஞ்சதுக்காக...உருகிய ரஜினி !

உங்களையெல்லாம் ரசிகர்களாக அடைஞ்சதுக்காக...உருகிய ரஜினி, இதுத்தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
'என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு,
 
நான் கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்துகொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.
 
உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைபடுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும்.
 
ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்' என்று தெரிவித்துள்ளார்.