புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:20 IST)

ரஜினி கூறிய அறிவுரையால் ரசிகர்கள் மன வருத்தம்..!

ரசிகர்களின் இதயத்தில் என்றும் முடிசூடா மன்னனாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் 2.0 மற்றும் பேட்ட படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.  இந்நிலையில் அவர் தற்போது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். 
 
கடந்த 23-ஆம் தேதியன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ரசிகர்களுக்கு ஒரு கசப்பான உண்மையை தெளிவுப்படுத்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தாலும் அது தான் உண்மை. 
 
அதாவது, மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டுமென்றும், அவரது பெயரை பயன்படுத்தி பதவி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை தன் அருகிலேயே சேர்க்க மாட்டேன் என்றும் நெஞ்சில் பதியும்படி அழுத்தமாக பதிவிட்டார்.
 
இதனையடுத்து தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பதிவில், 23-ஆம் தேதியன்று நான் கூறிய விஷயம் கசப்பாக இருந்தாலும் அது தான் உண்மை. அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்ட எனது ரசிகர்களுக்கு நன்றி என ரஜினி தெரிவித்திருக்கிறார்.
 
மேலும், உங்களை போல் ரசிகர்களை அடைந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகிறேன் என்றும் கூறிய அவர், படங்களில் தோன்றும் பஞ்ச் வசனம் போல்' எந்த சக்தியாலும் உங்களையும் என்னையும் பிரிக்க முடியாது" என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
 
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அவருக்கே உரித்தான ஸ்டைலிலேயே "என்னை வாழ வைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களே" என்று பதிவிட்டது ரசிகர்களை உள்ளம் உருகச் செய்தது.