Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: போட்டியிட வேட்பாளர் கிடைக்காமல் பாஜக திணறல்

Last Updated: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (12:47 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. திமுகவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும், அதிமுகவுக்கு அகில இந்திய தேசிய லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவை போக தினகரன் மற்றும் தீபா ஆகியோர்களும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் தே.மு.தி.க. தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் பாஜகவும் பிரபலம் ஒருவரை வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்தது. ஆனால் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் மூன்று நாட்களே மீதமுள்ள நிலையில் இன்னும் வேட்பாளரையே அறிவிக்காமல் அந்த கட்சி உள்ளது.

கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரனும், தமிழக தலைவர் தமிழிசையும் போட்டியிட மறுத்துவிட்டதால் யாரை நிறுத்துவது என்று புரியாமல் பாஜக திணறுவதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :