Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிபெரும்: கூறுவது யார் தெரியுமா??

Last Updated: புதன், 29 நவம்பர் 2017 (19:15 IST)
குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மற்றும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி சுலபமாக இருக்காது என தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் பட்டேல் சமூகத்தினர் பாஜக-வை எதிர்ப்பது.
பட்டேல் சமூகத்தினர் தற்போது பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். பாஜக-வை தோற்கடிப்பதையே கொள்கையாக கருதுகின்றனர். இதனால், காங்கிரஸுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது.


சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் பாஜகவின் வாக்கு சதவீதம் 47 என்ற அளவிலும் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 41 என்ற அளவிலும் இருந்துள்ளது.காங்கிரசுக்கு இது 12 சதவீதம் கூடுதல் வாக்குகள். முந்தைய கருத்து கணிப்புடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் படு வேகமாக முன்னேறியுள்ளது என இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மோடி அலை படிப்படியாக ஓய்ந்து வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தல் நெருங்கும்போது மேலும் காங்கிரஸுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் மாறவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :