வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:48 IST)

அண்ணாமலை கைய புடிச்சி நாங்களா தடுக்குறோம்.. ஆதாரம் இருந்தா வெளியிடட்டும்! – அமைச்சர் துரைமுருகன்!

பொங்கல் விழாவையொட்டி தொண்டர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் காவிரி நீர் பங்கீடு, ஊழல் குற்றச்சாட்டுகள், நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



அப்போது அவரிடம் காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடரும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்தபோதும் கூட தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை ஒரு சொட்டுக் கூட தந்துவிடக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தார். இப்போதும் அதே மனநிலையில் இருக்கிறார். அவரிடமிருந்து தமிழகத்திற்கு சாதகமான வார்த்தைகள் வராது. அவர் காலம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு எதிராகதான் பேசுவார்” என கூறியுள்ளார்.


தொடர்ந்து அண்ணாமலை திமுக பிரமுகர்கள் குறித்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறி வருவது குறித்து பேசிய அவர் “அண்ணாமலை ஊழல் பட்டியல் வைத்திருந்தால் வெளியிடட்டும். நாங்கள் என்ன அவர் கையையா பிடித்து வைத்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் திமுக எதிர்கொள்ளும்.

இது கொள்கையால் உருவாக்கப்பட்ட இயக்கம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகும். தற்போதைக்கு எங்களுடன் உள்ள கூட்டணி கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K