தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையே தொடரும்.. அண்ணாமலைக்கு தமிழக அரசு பதிலடி..!
தேசிய கல்வி கொள்கையின் படி தமிழகத்தில் மும்மொழி கொள்கையை வழிவகுக்க வேண்டும் என அண்ணாமலை கூறியதற்கு அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பே இல்லை என்றும் பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்கு பாதையில் செல்லும் அரசாகவே இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்போதும் தொழில்நுட்ப துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு மிஷினில் ஆணின் போன்றவற்றில் வருங்காலத்தில் மிக தீவிர பயிற்சி அளிக்கப்படும்.
அண்ணாமலை பகல்கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பே இல்லை. பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்கு பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும்
தமிழ்நாடு அரசு செய்ததை, செய்து கொண்டிருப்பதை தேசிய கல்விக்கொள்கையில் இணைத்துவிட்டு, தேசியக் கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு அரசு செயல்படுகிறது எனக் கூறுவது நகைப்புக்குரியது
தேசியக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்கு என சொல்லப்பட்ட பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது
இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
Edited by Siva