புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 பிப்ரவரி 2019 (15:42 IST)

எதிரிகளுக்கு சவுக்கடி...முகத்திரையை கிழிக்கணும் ...கேப்டன் ஸ்டைலில் விளாசும் விஜய பிரபாகரன்

தஞ்சாவூரில் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்  நேற்று மாலை தஞ்சாவூர் சென்றார். அங்கே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இறகுப் பந்து போட்டியை தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 
கடந்த காலங்களில் 58 % அளவுக்கே காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் நடைபெற்றது.  ஆனால் இப்போது 7 % அளவுக்கே விவசாயம் நடைபெற்றது. காவிரி நீர் வராததால் 51 % சதவீதம் விவசாயம் செய்ய முடியாமல் போனது.
 
காவிரியில் தண்ணீர் வர வேண்டுமானால் விஜயகாந்த ஆட்சிக்கு வர வேண்டும்.தேமுதிகவுக்கு 2 % ஓட்டு வங்கிதான் உள்ளது என்பவர்கள் எதற்காக எங்கள் வீட்டு வாசலில் கூட்டணிக்காக  நிற்க வேண்டும். எங்களிடம் கூட்டணி வைக்க வருகிறார்கள்..? தற்போது  டெல்லியில் குரல் கொடுக்க சரியான தலைவர் இல்லை. இப்போது உள்ள தலைவர்களில் தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் மட்டுமே உள்ளார்.
மேலும் விஜய காந்த் மீது எந்தக் குற்றமும் கூற முடியாது. எதிரிகளுக்கு சவுக்கடி கொடுத்து அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். எனக்கும் அப்பாவுக்கும் தஞ்சாவூர் தொகுதியில் தனி பாசம் உண்டு.. இவ்வாறு தெரிவித்தார்.