மம்தாவிற்கு மட்டும்தான் நாங்கள் எதிரி: அமித் ஷா!

Amit Shah
Last Modified சனி, 11 ஆகஸ்ட் 2018 (18:10 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் பல போராட்டங்களையும் பேரணிகளையும் முன்நின்று நடத்தி வருகிறது. பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அங்கு சுற்றுபயணமும் மேற்கொண்டு வருகிறார். 
சமீபத்தில், மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு, வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிரானது எனவும் இந்த விவகாரத்தில் நாட்டில் ரத்த ஆறு ஓடும் வகையில் பாஜக செயல்படுவதாக விமர்சித்தார். 
 
இது குறித்து, மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார் அமித் ஷா. அதில், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்தேசத்தவர்களை கணக்கெடுக்கும் பணியை அசாம் செய்து வருகிறது. 
 
அவர்களால் இந்தியாவில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை தேவை என பாஜக வலியுறுத்துகிறது. ஆனால் இதனை வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிராக மம்தா பானர்ஜி திசை திருப்புகிறார்.
 
பாஜக வாக்கு வங்கி அரசியல் நடத்தவில்லை. இந்த பிரச்சினையை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. நாங்கள் வங்க மொழி பேசுபவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மம்தா பானர்ஜிக்கு தான் எதிரிகள் என கூறியுள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :